Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'COVID-19 சம்பவங்கள் பதிவாகாமல் இருப்பது இறைவனின் செயல்' என்று கூறும் இந்தோனேசியா

இந்தோனேசியாவில்  இதுவரை எந்த ஒரு COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவமும் பதிவாகாமல் இருப்பது இறைவனின் செயல் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
'COVID-19 சம்பவங்கள் பதிவாகாமல் இருப்பது இறைவனின் செயல்' என்று கூறும் இந்தோனேசியா

படம்: REUTERS/Ajeng Dinar Ulfiana

இந்தோனேசியாவில் இதுவரை எந்த ஒரு COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவமும் பதிவாகாமல் இருப்பது இறைவனின் செயல் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் நாட்டிற்குள் நுழைவோரைப் பரிசோதிக்கும் முறையையும் தற்காத்துப் பேசினார் அவர்.

260 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டது இந்தோனேசியா. இதுவரை அங்கு எந்தக் கிருமித்தொற்றுச் சம்பவமும் பதிவாகவில்லை.

134 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர்களில் ஒருவருக்கும் கிருமித்தொற்று இல்லை.

இருப்பினும் இந்தோனேசியர்கள் சிலருக்கு வெளிநாடுகளில் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களுள் 8 பேர் Diamond Princess சொகுசுக் கப்பலைச் சேர்ந்த ஊழியர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்