Images
  • indonesia (2)
    படம்: AFP / SONNY TUMBELAKA

இந்தோனேசியா: 16 பேரிடம் உருமாறிய கிருமி வகைகள் அடையாளம்

இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கிருமி வகைகள், இந்தோனேசியாவில் 16 பேரிடம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவை வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை என்பதால், நோய்ப்பரவல் அதிகரிக்கலாம் என்று இந்தோனேசியச் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நோய்ப்பரவலை முறியடிக்க, மக்கள் சுகாதார நெறிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

இந்தோனேசியாவில், நோன்புப் பெருநாளைக் கொண்டாட மக்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல வேண்டாமென அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Top