Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிருமித்தொற்றுச் சூழலிலும் இந்தோனேசியாவில் தொடரும் பயங்கரவாத நடவடிக்கைகள்

இந்தோனேசியா, COVID-19 கிருமித்தொற்றைச் சமாளிக்கப் போராடி வரும் வேளையில் அந்நாட்டில் செயல்படும் பயங்கரவாதப் பிரிவுகள் அவற்றின் நடவடிக்கைகளைத் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியா, COVID-19 கிருமித்தொற்றைச் சமாளிக்கப் போராடி வரும் வேளையில் அந்நாட்டில் செயல்படும் பயங்கரவாதப் பிரிவுகள் அவற்றின் நடவடிக்கைகளைத் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை தீவிரவாதச் செய்திகளைப் பரப்புவதுடன் புதிய ஆள்களைத் திரட்டி வருவதாக தேசிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் மூத்த அதிகாரி எடி ஹர்ட்டோனோ (Eddy Hartono) CNAக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் குறிப்பிட்டார்.

புதிய தாக்குதல்களுக்கு, அவை திட்டமிடுவதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 232 பேரைக் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு கடந்த ஆண்டு கைது செய்தது.

பாதுகாப்பு அதிகாரிகள், அரசாங்க அமைப்புகள், ராணுவம், காவல்துறை ஆகிய தரப்புகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டதாகத் திரு. ஹர்ட்டோனோ தெரிவித்தார்.

இருப்பினும் கிருமித்தொற்றுக் காலத்தில், ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர ஈராக், சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்