Images
  • smoking rules (1)
    (படம்: AFP)

இந்தோனேசியா: இணையப் புகையிலை விளம்பரங்களுக்குத் தடை

இந்தோனேசியா இணையப் புகையிலை விளம்பரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

புகைபிடிப்போரை அந்தப் பழக்கத்தைக் கைவிடச் செய்வது அதன் நோக்கம்.

இளையர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருவதாகச் சுகாதார நலக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

தற்போது சிகரெட் விளம்பரங்களுக்கு தேசிய அளவிலான தடை நடப்பில் உள்ளது. இருப்பினும் அதிகாரிகளால் அந்தத் தடை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

இணையத்தில் வெளியிடப்படும் சிகரெட் விளம்பரங்கள் தடை செய்யப்படுவது உறுதிசெய்யப்படும் என இந்தோனேசியா தெரிவித்துள்ளது.  

Top