இந்தோனேசியாவில் நாளை முதல் தடுப்பூசி போடும் திட்டம்
சீனாவின் Sinovac மருந்தாக்க நிறுவனம் உருவாக்கிய Coronovac தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதற்கு இந்தோனேசியா ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவைத் தவிர்த்து அதன் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு இந்தோனேசியா.
Sinovac நிறுவனத்தின் தடுப்பூசி பெரிய அளவில் பாதுகாப்பானது என்று இந்தோனேசிய மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறினர்.
அது, கிருமிப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்
இந்தோனேசியாவில் நாளை தடுப்பூசிப் போடும் திட்டம் தொடங்கவிருக்கிறது.
Sinovac நிறுவனத்தின் தடுப்பு மருந்தை அவசர நிலைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கியது திட்டத்தை இன்னும் எளிதாகச் செயல்படுத்த வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் ஜோக்கோ விடோடோ முதல் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வார். அதையடுத்து 1.3 மில்லியன் முன்னணி ஊழியர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்படும்.
இந்தோனேசியாவில் 830,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 24,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.