Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தேனேசியாவில் சுகாதாரத்துறை, அரசாங்கத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்

இந்தேனேசியாவில் சுகாதாரத்துறை, அரசாங்கத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்

வாசிப்புநேரம் -

இந்தேனேசியாவில் சுகாதார ஊழியர்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் கிருமிப்பரவலுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன.

சீனாவின் Sinovac Biotech நிறுவனத்தின் தடுப்பூசியை, அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo) நேற்று போட்டுக்கொண்டார்.

இந்தோனேசியச் சுகாதார அமைச்சு, முதற்கட்டமாக, 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்க ஊழியர்களான 17.4 மில்லியன் பேருக்கும் தடுப்பூசி போட அது எண்ணம் கொண்டுள்ளது.

ஜக்கர்த்தாவின் Cipto Mangunkusumo மருத்துவமனையைச் சேர்ந்த 25 சுகாதார ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டது.

நாள் ஒன்றுக்கு 275 பேர் என்னும் விகிதத்தில், 6,000க்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்படும் என்று அந்த மருத்துவமனை குறிப்பிட்டது.

இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11, 278 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாயினர். 306 பேர் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்