Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவில் சினபுங் எரிமலை வெடித்தது

இந்தோனேசியாவில் சினபுங் எரிமலை வெடித்தது

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் சினபுங் எரிமலை வெடித்தது

கோப்புப்படம்: AFP

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினபுங் எரிமலை இன்று வெடித்தது.

எரிமலை வெடிப்பால் சுமார் 5,000 மீட்டர் உயரம் வரை பெரும் அளவிலான புகையும் சாம்பலும் காற்றில் கலந்தன.

எரிமலை வெடிப்பால் யாரும் மாண்டதாகவோ காயமுற்றதாகவோ தகவல் இல்லை.

இருப்பினும் எரிமலைக் குழம்பு வழியத் தொடங்கலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்தப் பகுதிக்கான விமானச் சேவை இதுவரை பாதிக்கப்படவில்லை.

2010ஆம் ஆண்டிலிருந்தே குமுறிக் கொண்டிருக்கும் சினபுங் எரிமலை, 2016ஆம் ஆண்டு வெடித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்