Images
  • polling opens
    படம்: Jack Board

இந்தோனேசியத் தேர்தல்: வாக்களிப்பு தொடங்கியது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தோனேசியாவில் பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றுக்கான  வாக்களிப்பு தொடங்கியுள்ளது.

வாக்காளர்களின் விரல்களில் வாக்களித்தற்கு அடையாளமிட ஹலால் அங்கீகாரம் பெற்ற மை இடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவிற்கும் சிறப்புப் படையின் முன்னாள் தளபதி பிராபோவோ சுபியாந்தோவிற்கும் இடையே போட்டி.

மக்களின் ஆதரவு அதிபர் விடோடோவுக்குச் சற்றே கூடுதலாக இருப்பதாய்க் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.


வாக்களிக்கத் தகுதிபெற்றவர்கள் - சுமார் 190 மில்லியன்

மொத்த வாக்களிப்பு நிலையங்கள் - 800,000

மொத்த வேட்பாளர்கள் -245,000

அண்டை நாடுகளான தாய்லந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கிழக்குத் தீமோர், புருணை ஆகியவற்றின் மொத்த மக்கள்தொகையைக் காட்டிலும் இந்தோனேசியாவில் வாக்களிக்கவிருப்போர் எண்ணிக்கை அதிகம்.



Top