Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Squid Game விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி, மும்மடங்கு வருவாய் ஈட்டும் இந்தோனேசிய உணவகம்

Squid Game எனும் தென் கொரிய தொடரில் வருவது போன்ற சில விளையாட்டுகளை இந்தோனேசியாவில் உள்ள உணவகம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
Squid Game விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி, மும்மடங்கு வருவாய் ஈட்டும் இந்தோனேசிய உணவகம்

(படம்: AJENG DINAR ULFIANA/REUTERS)

Squid Game எனும் தென் கொரிய தொடரில் வருவது போன்ற சில விளையாட்டுகளை இந்தோனேசியாவில் உள்ள உணவகம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

அது குறித்து 8 World செய்தி தகவல் வெளியிட்டது.

இதனால் உணவகத்தின் வருவாய் மும்மடங்கு அதிகரித்துள்ளது.

COVID-19 கிருமிப்பரவல் பல வணிகங்களை மோசமாக பாதித்தது.

(படம்: AJENG DINAR ULFIANA/REUTERS)

(படம்: AJENG DINAR ULFIANA/REUTERS)

இந்தோனேசியாவில் உள்ள கஃபே ஸ்ட்ராபெரி (Cafe Strawberry) என்ற ஓர் உணவகம், நாடகத்தில் வரும் விளையாட்டுகளைப் போலவே வாடிக்கையாளர்கள் விளையாட ஏற்பாடு செய்துள்ளது.

Squid Game தொடர் அண்மையில் உலகப் பிரபலம் அடைந்தது.

அதில் வரும் கதாபாத்திரங்களின் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து ஊழியர்கள் போலித் துப்பாக்கிகளை ஏந்தி பாதுகாவலர்கள் போல் தோற்றமளிக்கிறார்கள்.

அவர்கள் வாடிக்கையாளர்களை உணவகத்தின் ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று விளையாட்டுகளைத் தொடங்குகின்றனர்.

வாடிக்கையாளர்களின் முதல் சவாலுக்குப் பெயர் நாடகத்தில் வருவது போல் சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு எனப் பெயர் கொண்டது.
இந்த அனுபவம் மிகவும் உற்சாகமாகவும் தனித்துவமாகவும் இருப்பதாக உணவகத்துக்கு வரும் இளம் வாடிக்கையாளர்களில் சிலர் ராய்ட்டர்ஸிடம் கூறினர்.

வருவாய் அதிகரித்ததில் உணவக உரிமையாளர் ஆனந்தம் அடைந்திருப்பதாக 8 world செய்தி சொன்னது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்