Images
  • palu earthquake tsunami
    (படம்: REUTERS/Jorge Silva)

இந்தோனேசிய இரட்டைப் பேரிடர் - சடலங்களைத் தேடி மீட்கும் பணி இன்றோடு நிறுத்தம்

இந்தோனோசியாவின் சுலாவெசி தீவில் நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் மாண்டவர்களின் சடலங்களைத் தேடி மீட்கும் பணி இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இன்னும் 5,000 பேரைக் காணவில்லை.

7.5 ரிக்டர் அளவில் கடந்த மாதம் 28ஆம் தேதி, பாலு வட்டாரத்தில்
நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டன.

இதுவரை 2,000 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட நகரத்தில் 5,000த்துக்கு அதிகமானோர் புதையுண்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

அந்த இடங்களில், மீட்புப் பணிகள் தொடராது என்றும் அவ்விடங்கள் மாண்டவர்களின் கல்லறையாகக் கருதப்படும் என்றும் இந்தோனேசிய அரசாங்கம் முன்னதாகக் கூறியது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பூங்காக்களும் நினைவுச்சின்னங்களும் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

Top