Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: இணையம் வழி பாலியல் சேவை வழங்கிய இரு பெண்களுக்கு பொது இடத்தில் 100 கசையடி

இந்தோனேசியா: இணையம் வழி பாலியல் சேவை வழங்கிய இரு பெண்களுக்கு பொது இடத்தில் 100 கசையடி

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: இணையம் வழி பாலியல் சேவை வழங்கிய இரு பெண்களுக்கு பொது இடத்தில் 100 கசையடி

(படம்: AFP)

இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் இணையம் வழி பாலியல் சேவை வழங்கிய இரு பெண்களுக்கு பொது இடத்தில் 100 கசையடி கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில அதிகாரி ஒருவர் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில், அச்சே மாநிலத்தில் மட்டுமே இஸ்லாமிய ஷரியா சட்டம் நடப்பில் உள்ளது.

ஷரியா சட்டப்படி விபச்சாரம், சூதாட்டம், கள்ளத்தொடர்பு, மது அருந்துதல், ஓரினச் சேர்க்கை ஆகியவை குற்றமாக வகைப்படுத்தப்படும்.

கொரோனா கிருமிப்பரவல் காரணமாக பலர் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லங்ஸா நகரில், தண்டனை நிறைவேற்றப்பட்டபோது பலர் கூடி நின்று பார்த்தனர்.

அவர்கள் இரு பெண்களும், பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த வேறு ஐவரும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இணையம் வழி பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள மேலும் பலரைத் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது இடங்களில் வைத்துக் கசையடி கொடுப்பது கொடூரமானது என்று மனித உரிமைக் குழுக்கள் வெகு காலமாக எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அத்தகைய தண்டனை முடிவுக்கு வரவேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இருப்பினும் அது அச்சே வாழ் முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்