Images
  • indonesian police kill militant (1)
    (படம்: Amy Chew)

சுரபாயா தேவாலயக் குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்ட குழுவுக்குத் தொடர்புடைய சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

இந்தோனேசியக் காவல்துறையினர், சுரபாயா தேவாலயக் குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்ட குழுவுக்குத் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர்.

சந்தேக நபர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் என்று இந்தோனேசியக் காவல்துறை தெரிவித்தது.

சுரபாயாவின் 3 தேவாலயங்களில் ஞாயிறன்று நடந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

சுரபாயா காவல்துறைத் தலைமையகத்திலும் தற்கொலைத் தாக்குதல் நடந்தது. அதில் 6 பேர் மாண்டனர், 11 பேர் காயமடைந்தனர்.


Top