Images
  • Indonesian President
    (படம்: Barbara Walton/Pool/AFP)

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் ஹபீபி காலமானார்

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் B J ஹபீபி காலமானார்.

அவருக்கு வயது 83.

ஜக்கர்த்தாவிலுள்ள கட்டொட் சொப்ரோத்தோ(Gatot Soebroto) ராணுவ மருத்துவமனையில் இந்தோனேசிய நேரப்படி மாலை 6 மணிக்கு அவர் மரணமடைந்தார்.

திரு. ஹபீபி இந்தோனேசியாவின் மூன்றாம் அதிபராகப் பதவி வகித்தார்.

இந்தோனேசிய ஊடகத் தகவல்படி, செப்டம்பர் 1இலிருந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
 

Top