Images
  • mecca
    (கோப்புப் படம்: AFP)

ஹஜ்ஜுப் பயணத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசிய வர்த்தகர்கள்

கிருமித்தொற்று சூழலில், சவுதி அரேபியாவுக்கான புனித ஹஜ்ஜுப் பயணம் இரண்டாவது ஆண்டாகத் தடைபட்டுள்ளதால், இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு, இன்னும் சில வாரங்களே உள்ளன.

புனிதப் பயணத்துக்குத் தயாராவோருக்குத் தேவையான பொருள்களை விற்கும் கடைகள் இந்த நேரத்தில் பரபரப்பாகச் செயல்படுவது வழக்கம்.

ஆனால், இப்போது அவை வெறிச்சோடிக் கிடக்கின்றன.

கடை உரிமையாளர் முகம்மது அஸீஸ்,கிருமித்தொற்றுச் சூழலுக்கு முன்னர் இத்தகைய காலக்கட்டத்தில் ஒரு நாளைக்குச் சுமார் 1,750 டாலர்வரை சம்பாதிக்க முடிந்ததாகக் கூறினார்.

புனிதப் பயணத்துக்குத் தேவையான ஆடைகள், கைக்கு அடக்கமான புனிதப் புத்தகங்கள், தொழுகைப் பாய்கள்-போன்றவை இவரது கடையில் அதிகம் விற்பனையாகும்.

புனிதப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை, சவுதி அரேபியா கட்டுப்படுத்த முடிவெடுத்ததால், திரு. அஸீஸைப் போன்ற பல்லாயிரம் வர்த்தகர்களுக்கு பாதிப்பு.

சிலர், நிரந்தரமாக வர்த்தகத்தைக் கைவிடவேண்டிய நிலை.

வேறு வழியின்றி ஒருசில வாடிக்கையாளர்களுக்காகச் சில வர்த்தகர்கள் கடையைத் திறந்துவைத்துக்கொண்டு வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றனர்.  

Top