Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

16 வயதுப் பெண் தற்கொலை செய்துகொள்ள ஆதரித்து வாக்களித்தவர்கள்மீது சமூக ஊடகத்தில் கண்டனம்

உயிர்வாழலாமா வேண்டாமா என்று Instagram-இல் வாக்கெடுப்பை நடத்தித் தற்கொலை செய்துகொண்ட 16 வயதுப் பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் பலர் கொந்தளித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
16 வயதுப் பெண் தற்கொலை செய்துகொள்ள ஆதரித்து வாக்களித்தவர்கள்மீது சமூக ஊடகத்தில் கண்டனம்

(படம்: Reuters)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கோலாலம்பூர்: உயிர்வாழலாமா வேண்டாமா என்று Instagram-இல் வாக்கெடுப்பை நடத்தித் தற்கொலை செய்துகொண்ட 16 வயதுப் பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் பலர் கொந்தளித்துள்ளனர்.

இறந்த பெண்ணின் Instagram பக்கத்தில் இரங்கல் தகவல்களைப் பதிவுசெய்தவர்கள் பெண்ணைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதாகக் கூறி சினமடைந்தனர்.

பெண் தற்கொலை செய்துகொள்ளலாம் எனக் கருத்துத் தெரிவித்தவர்கள் தற்போது ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பார்கள் என்று இணையவாசகர் ஒருவர் பதிவு செய்திருந்தார்.

சமூகத்தில் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் பெண்ணின் தற்கொலைக்கு ஒரு காரணம் என்று மற்றொருவர் கூறினார்.

சென்ற திங்கட்கிழமை Instagram வழியாகக் கருத்துகளைத் திரட்டிய பெண் பின்னர் கட்டடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

கருத்துக்கணிப்பில் சுமார் 69% விழுக்காட்டினர் மரணத்தைக் குறிக்கும் "D" என்ற எழுத்தைக் குறிப்பிட்டுப் பதிவுசெய்திருந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்