Images
  • ipl (1)
    படம்: AFP

இந்தியாவில் கிருமிப்பரவல் அதிகரிப்பு : IPL கிரிக்கெட் தொடர் ரத்து

இந்தியாவில் COVID-19 நோய்ப்பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் IPL கிரிக்கெட் தொடர் கால வரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த தொடரில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் சிலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

நிறுத்தப்பட்ட தொடர் வேறொரு நேரத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டுக்கான தொடரில் சுமார் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் மீதி ஆட்டங்கள் எப்போது இடம்பெறும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 4 அணிகளில் உள்ள வீரர்களுக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.

பாதுப்பான சூழலில் இருந்தும் விளையாட்டு வீரர்களுக்கும் அணி நிர்வாகிகளுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே விளையாட்டு வீரர்கள் சிலர், நோய்த்தொற்று அச்சம் காரணமாக கிரிக்கெட் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினர்.

- Reuters 

Top