Images
  • mahan air
    (படம்: AP Photo/Vahid Salemi)

ஈரானின் இரண்டாவது ஆகப் பெரிய விமான நிறுவனம் மீது இணையத் தாக்குதல்

ஈரானின் இரண்டாவது ஆகப் பெரிய மஹான் ஏர் (Mahan Air) விமான நிறுவனத்தை இணைய ஊடுருவல்காரர்கள் மீண்டும் குறிவைத்துள்ளனர்.

கணினிக் கட்டமைப்பைக் குறிவைத்த ஊடுருவல் திறம்படச் சமாளிக்கப்பட்டதாகவும், உரிய நேரத்தில் விமானச் சேவைகள் தொடர்ந்ததாகவும் மஹான் ஏர் கூறியது.

என்றாலும் அந்த நிறுவனத்தின் இணையத்தளம் முடங்கியது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் மஹான் ஏர் நிறுவனத்தை ஊடுருவல்காரர்கள் குறிவைத்ததாக அதன் பேச்சாளர் கூறினார்.

ஈரானின் முக்கியமான தனியார் விமானச் சேவை நிறுவனம் மஹான் ஏர்.

அமெரிக்கா தடை விதித்துள்ள நிறுவனங்களின் பட்டியலில் அதுவும் உள்ளது.

-AFP 

Top