Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உக்ரேனிய விமான விபத்து: ஈரான்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

உக்ரேனிய விமான விபத்தில் குடிமக்களை இழந்த நாடுகள், ஈரான்மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
உக்ரேனிய விமான விபத்து: ஈரான்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

(படம்: AFP)

உக்ரேனிய விமான விபத்தில் குடிமக்களை இழந்த நாடுகள், ஈரான்மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

அது தொடர்பாக, கனடா (Canada), சுவீடன் (Sweden), ஆஃப்கானிஸ்தான் (Afghanistan) ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் நாளை மறுநாள் லண்டனில் சந்திக்கவிருப்பதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் வேடிம் பிரிஸ்டாய்கோ (Vadym Prystaiko) கூறினார்.

விபத்துப் பற்றிய விசாரணை, இழப்பீடு ஆகியவை குறித்து அவர்கள் கலந்தாலோசிப்பர் என்று அவர் குறிப்பிட்டார்.

விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலானோர் இரட்டைக் குடியுரிமை கொண்டிருந்த ஈரானியர்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்