Images
  • nora (1)
    (படம்: FAMILY HANDOUT / LUCIE BLACKMAN TRUST / QUOIRIN FAMILY / AFP)

மலேசியாவில் காணாமற்போன அயர்லந்துப் பெண் மாண்டுபோயிருக்கலாம்

மலேசியாவில் காணாமற்போன பதின்மவயது அயர்லந்துப் பெண் மாண்டுபோயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பிரிட்டனின் லூசி பிளாக்மேன் (Lucie Blackman) அறநிறுவனம், அதனைத் தெரிவித்தது.

வெளிநாட்டில் காணாமற்போகும் பிரிட்டிஷ் குடும்பங்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளது அந்நிறுவனம்.

தேடல் பணியில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது, காணாமற்போன 15 வயது நோரா குய்ரியின் (Nora Quoirin) சடலமாக இருக்கக் கூடுமென்று நம்பப்படுவதாகவும் அது தெரிவித்தது.

10 நாள்களுக்கு முன்னர் நோரா, நெகிரி செம்பிலான் உல்லாச விடுதி ஒன்றிலிருந்து காணாமற்போனார். அவருக்குக் கற்றல் குறைபாடு இருந்தது.

உல்லாச விடுதியில் திறந்திருந்த சன்னலில் ஏறி நோரா வெளியே சென்றிருக்கலாம் என்று காவல்துறை கூறியது.

குற்றச்செயலுக்கான சாத்தியத்தையும் அது மறுக்கவில்லை.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சடலம் நோராவினுடையதா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. 

Top