Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காணாமல் போன அயர்லந்துப் பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு 50,000 ரிங்கிட் வெகுமதி

மலேசியாவில் காணாமல்போன அயர்லந்துப் பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு 50,000 ரிங்கிட் வெகுமதியை வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்

வாசிப்புநேரம் -
காணாமல் போன அயர்லந்துப் பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு 50,000 ரிங்கிட் வெகுமதி

(படம்: FAMILY HANDOUT / LUCIE BLACKMAN TRUST / QUOIRIN FAMILY / AFP)

மலேசியாவில் காணாமல்போன அயர்லந்துப் பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு 50,000 ரிங்கிட் (16,524 வெள்ளி) வெகுமதியை வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

15 வயது நோரா காணாமல்போய் ஒரு வாரத்துக்குமேல் ஆகிவிட்டது.

அவர் தங்களின் ஒரே மகள், பொக்கிஷம் போன்ற அந்த மகள் காணாமல் போனதால் தாங்கள் மனமுடைந்து போயிருப்பதாக அவரது தாய் கூறினார்.

நோரா பற்றித் தகவல் தெரிந்தவர்கள் அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

காவல்துறையினர் மகளைத் தங்களிடம் சேர்க்க அரும்பாடுபடுகின்றனர் என்றார் அவர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆகஸ்ட் நான்காம் தேதி நோரா காணாமல் போனார்.

அதன்பிறகு அவரைத் தேடும் அனைத்து முயற்சிகளும் ஆதாரம் ஏதுமில்லாமல் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்