Images
  • syria and isis (1)
    (படம்: Rodi Said/Reuters)

மலேசியா: ஐ எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக்கூடும்

மலேசியாவில் ஐ எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று மலேசியாவின் காவல்துறை உயரதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவிலும் ஈராக்கிலும் திட்டம் நிறைவேறாதவர்கள் மீண்டும் மலேசியாவுக்கு வரச் சாத்தியம் இருப்பதாக Inspector General Abdul Hamid Bador கூறியுள்ளார்.
South China Morning Postஇடம் அவர் பேசினார்.

ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் குறைந்ததைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட மலேசியர்கள் பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சமூக வலைத் தளங்களின்வழி அவர்கள் தகவல்களைப் பரிமாற முயற்சிசெய்யக்கூடும் என்றும் அதிகாரி கூறினார்.

பலர் இணையத்தில் தீவிரவாதச் சித்தாந்தத்திற்கு சுயமாக மாறியவர்கள்.

2013ஆம் ஆண்டிலிருந்து 100க்கும் அதிகமான மலேசியர்கள் சிரியாவுக்கும் ஈராக்கிற்கும் ஐ எஸ் அமைப்பில் சேரச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சண்டைகளில் 40 பேர் மாண்டனர். 9 பேர் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தியபோது மாண்டனர்.

கடந்த ஆறாண்டுகளில் 20க்கும் அதிகமான பயங்கரவாதச் சதித்திட்டங்களை மலேசியக் காவல்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

Top