Images
  • israel bahrain (1)
    (படம்: AFP / POOL / RONEN ZVULUN)

இஸ்ரேலுக்கும் பஹ்ரைனுக்கும் இடையில் அதிகாரபூர்வ அரசதந்திர உறவு

இஸ்ரேலுக்கும், பஹ்ரைனுக்கும் (Bahrain) இடையிலான அரசதந்திர உறவுகள் இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கவிருக்கின்றன.

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் (Manama) இன்று பின்னேரம் அதற்கான நிகழ்ச்சி நடைபெறும்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வழக்கநிலைக்குத் திரும்புவதன் தொடர்பில் சென்ற மாதம் இணக்கம் காணப்பட்டது. அதன் ஓர் அங்கமாக அரசதந்திர உறவுகளை நிறுவும் முயற்சி இடம்பெறுகிறது.

அந்த உடன்பாட்டின் கீழ், இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் இடையில் முழுமையான அரசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன; வர்த்தக ரீதியான விமானப் போக்குவரத்து, வர்த்தக உடன்பாடுகள் ஆகியவை குறித்தும் இணக்கம் காணப்பட்டது.

Top