Images
  • Jakarta Escooter
    (படம்:  Grab Indonesia)

ஜக்கார்த்தா சைக்கிள் பாதைகளில் மின்-ஸ்கூட்டர் ஓட்ட அனுமதியில்லாமல் போகலாம் - Grab மின்-ஸ்கூட்டர் சேவை நிறுத்தம்


இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவின் பல பகுதிகளில் Grab நிறுவனம் அதன் மின்-ஸ்கூட்டர் வாடகைச் சேவையை இந்த வாரம் நிறுத்தி வைத்துள்ளது.

சைக்கிள் பாதைகளில் மின்-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்த நிச்சயமற்ற நிலையில் அந்த நடவடிக்கையை Grab மேற்கொண்டுள்ளது.

சைக்கிள் பாதைகள் குறித்த ஆணை ஒன்றில் கடந்த வாரம் கையெழுத்திடப்பட்டது.

அது தற்போது நடப்பில் உள்ளது.

சைக்கிள் பாதைகளில் ஸ்கூட்டரைச் செலுத்த அந்த ஆணை அனுமதிக்கிறது.

ஆனால் அது மின்-ஸ்கூட்டரா, கிக்-ஸ்கூட்டரா (kick scooter) என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

GrabWheels வாடகைச் சேவையை Grab நிறுவனம் கடந்த மே மாதம் ஜக்கார்த்தாவில் அறிமுகம் செய்தது.

அது அந்த நகர்வாசிகளிடையே பிரபலமாகிவிட்டது.

ஆனால், மின்-ஸ்கூட்டரைப் பயன்படுத்துவோர் கண்மூடித்தனமாக அவற்றைச் செலுத்துவதையும், பொது வசதிகளுக்குச் சேதம் ஏற்படுத்துவதையும் அரசாங்கம் கண்டது.

அதைத் தொடர்ந்து மின்-ஸ்கூட்டரைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Top