Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜக்கர்த்தாவில் புதிய வேலை உருவாக்கச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

அது ஊதியத்தைக் குறைப்பதோடு, வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதில் உள்ள கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர். 

வாசிப்புநேரம் -
ஜக்கர்த்தாவில் புதிய வேலை உருவாக்கச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

(படம்:AP Photo/Dita Alangkara)

இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் அனைத்துலகத் தொழிலாளர் தினத்தைக் குறிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், புதிய வேலை உருவாக்கச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

அந்தச் சட்டம், தங்களது உரிமைகளையும் நலன்களையும் பாதிக்கும் என்று அவர்கள் கூறினர்.

அது ஊதியத்தைக் குறைப்பதோடு, வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதில் உள்ள கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தோனேசியாவின் பல நகரங்களில் அந்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றபோதும், கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் ஜோக்கோ விடோடோ அதில் கையெழுத்திட்டார்.

அதிக முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளுக்கு அந்தச் சட்டம் உதவும் என்று இந்தோனேசிய அரசாங்கம் நம்புகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்