Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: ஜல்லிக்கட்டில் 20க்கும் மேற்பட்டோர் காயம்

தென் இந்தியாவின் பாலமேட்டில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் நாளில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்தியா: ஜல்லிக்கட்டில் 20க்கும் மேற்பட்டோர் காயம்

படம்: AFP

தென் இந்தியாவின் பாலமேட்டில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் நாளில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

காளை மாடுகளை அடக்கும் போட்டியாக இருக்கும் ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் உள்ள கிராமங்களில் மிகவும் பிரபலம்.

நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டின் முதல் நாள்.

மதுரைக்கு அருகிலுள்ள பாலமேட்டில் நடந்த போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

விலங்குவதையைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு 2014ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஆனால் 2017ஆம் ஆண்டு தடை அகற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளை மாடுகள் தேவையின்றித் துன்புறுத்தப்படுவதாகவும் அதில் கலந்து கொள்ளும் வீரர்களின் உயிருக்கு ஆபத்து விளையக் கூடுமென்றும் விலங்குநல அமைப்புகள் கூறி வருகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்