Images
  • suicide
    கோப்புப் படம்: AP

ஜப்பான்: 40 ஆண்டு காணாத அளவுக்குப் பிள்ளைகளிடையே தற்கொலை விகிதம் அதிகரிப்பு

ஜப்பானில் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை, 40 ஆண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டுக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கிருமிப்பரவலால் சென்ற ஆண்டு, ஜப்பானில் பள்ளிகள் மூடப்பட்டன. அந்தக் காலக்கட்டத்தில் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பிள்ளைகளில் 415 பேர், தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

அது, சென்ற ஆண்டின் எண்ணிக்கையைவிட, சுமார் 100 அதிகம்.

இதற்கிடையே, ஏறக்குறைய 200 ஆயிரம் பிள்ளைகள் 30 நாளுக்கும் மேல் பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கூறப்பட்டது.

வீடுகளிலும் பள்ளிகளிலும் கிருமிப்பரவல் சூழலால் உண்டாகும் மாற்றங்கள், அவர்களின் நடத்தையைப் பெரிய அளவில் பாதிக்கக்கூடியவை எனக் கல்வி அமைச்சின் அதிகாரியை மேற்கோள்காட்டி NHK நிறுவனம் செய்தி வெளியிட்டது. 

Top