Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானிய வெள்ளத்திலிருந்து தப்பித்த 9 வயதுக் குதிரை

ஜப்பானில் வெள்ளத்திலிருந்து தப்பித்த 9 வயதுக் குதிரை, ஜப்பானியர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
ஜப்பானிய வெள்ளத்திலிருந்து தப்பித்த 9 வயதுக் குதிரை

(படம்: AFP/Peace Winds Japan/Handout)

ஜப்பானில் வெள்ளத்திலிருந்து தப்பித்த 9 வயதுக் குதிரை, ஜப்பானியர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளது.

வெள்ளத்தின்போது நீந்தி, கட்டடம் ஒன்றின் கூரையில் அடைக்கலம் புகுந்து உயிர்பிழைத்துள்ளது அந்தக் குதிரை.

குராஷிக்கி எனும் நகரத்திலுள்ள முதியோர் இல்லத்தின் செல்லப் பிராணியான அந்தக் குதிரை, 3 நாட்களாக கட்டடத்தின் கூரையில் சிக்கியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்பின், மீட்புப் பணியாளர்களால் அது மீட்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால், தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வந்ததால் முதியோர் இல்லத்திலிருந்த 9 வயதுக் குதிரையும் அதன் குட்டியும் அவற்றின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெளியேற்றப்பட்டன.

இருப்பினும், கடுமையான வெள்ளத்தில் 9 வயதுக் குதிரையின் குட்டி பலியானதாகக் கூறப்பட்டது.

உயிர்பிழைத்த குதிரை மீண்டும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுடன் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளது.

குறைந்தது 179 பேரை பலி வாங்கிய வெள்ளத்திலிருந்து மீண்டு வர ஜப்பான் முயன்று வருகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்