Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான் பிரதமராக யோஷிஹிடோ சுகாவை உறுதிப்படுத்த வாக்களிப்பு

ஜப்பானிய நாடாளுமன்றத்தில் திரு. யோஷிஹைட் சுகாவை (Yoshihide Suga) அடுத்த பிரதமராய் உறுதிப்படுத்துவது தொடர்பிலான வாக்களிப்பு இன்று நடைபெறவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஜப்பான் பிரதமராக யோஷிஹிடோ சுகாவை உறுதிப்படுத்த வாக்களிப்பு

(படம்: Reuters)

ஜப்பானிய நாடாளுமன்றத்தில் திரு. யோஷிஹைட் சுகாவை (Yoshihide Suga) அடுத்த பிரதமராய் உறுதிப்படுத்துவது தொடர்பிலான வாக்களிப்பு இன்று நடைபெறவிருக்கிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று திரு. சுகாவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நம்பப்படுகிறது.

இன்று பிற்பகல் அவர் பதவியேற்றுக்கொள்வார்; பின்னர் அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான பொறுப்புகளை வகிக்கும் அமைச்சர்கள் புதிய அமைச்சரவையிலும் தொடர்வர் என்று ஏற்கனவே அவர் உறுதியளித்துள்ளார்.

நேற்று முன் தினம், ஜப்பானின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சித் தலைவராகத் திரு. சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜப்பானில் நீண்டகாலம் பிரதமராகப் பொறுப்புவகித்த திரு. ஷின்ஸோ அபே (Shinzo Abe), உடல்நலக் குறைவு காரணமாகப் பதவி விலகியதையடுத்து திரு. சுகா பொறுப்பேற்கவிருக்கிறார். திரு. அபே அறிவித்த திட்டங்களையும், பொருளியல் கொள்கைகளையும் தொடர அவர் உறுதிகூறியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்