Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'Comfort Woman' சிலைக்கு முன் ஜப்பானிய பிரதமர்மண்டியிட்டு, தலை வணங்குவது போன்ற சிலையால் சர்ச்சை

தென் கொரியாவில், 'comfort woman' சிலைக்கு முன் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) மண்டியிட்டு,தலை வணங்குவதைப்போல  உள்ள  சிலை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
'Comfort Woman' சிலைக்கு முன் ஜப்பானிய பிரதமர்மண்டியிட்டு, தலை வணங்குவது போன்ற சிலையால் சர்ச்சை

(படம்: REUTERS/Kim Kyung-Hoon)

தென் கொரியாவில், 'Comfort Woman' சிலைக்கு முன் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) மண்டியிட்டு,தலை வணங்குவதைப்போல உள்ள சிலை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின்போது விபச்சார விடுதிகளில் வலுக்கட்டாயமாக வேலை செய்த தென் கொரியப் பெண்கள் 'comfort woman' என்று அழைக்கப்படுகின்றனர்.

அவர்களிடம் ஜப்பானியப் பிரதமர் மன்னிப்புக் கேட்பதை சிலை மறைமுகமாகச் சித்தரிப்பதாய்க் கூறப்படுகிறது.

அந்தப் பெண்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கப்பட்டதா என்பதன் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் வெகுநாட்களாக சர்ச்சை நீடிக்கிறது.

2015-ஆம் ஆண்டு திரு அபே அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதோடு, அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கவும் உடன்பாடு காணப்பட்டது.

ஆனால் தென் கொரியாவில் அடுத்துப் பொறுப்பேற்ற அரசாங்கம் உடன்பாட்டில் தவறு இருப்பதாகக் குறைகூறி அதை நிராகரித்தது.

இருநாடுகளுக்கும் அவ்வப்போது இதன் தொடர்பில் பிணக்கு எழுவதுண்டு.

தற்போது சிலை விவகாரம் கிளம்பியிருக்கிறது.

சிலை குறித்த அறிக்கைகள் உண்மையாக இருந்தால், அது அனைத்துலக உடன்பாட்டை மீறும் மன்னிக்கமுடியாத செயலாக இருக்கும் என்று ஜப்பானிய அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) கூறினார்.

அது ஜப்பான்- தென் கொரியா இடையிலான உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அவர் சொன்னார்.

மண்டியிட்டுத் தலை வணங்கும் நபரின் சிலை, வரலாற்றில் நேர்ந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கோருபவரைப் பிரதிபலிக்கிறது என்றும் அதிபர் அபேயைக் குறிப்பாகக் காட்டவில்லை என்றும் சிலையின் உரிமையாளர்கள் கூறினர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்