Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான் - கொரோனா சிகிச்சைக்குரிய மருந்துக்கு அனுமதி அளிப்பதில் சுணக்கம்

ஜப்பானில் கொரோனா கிருமித்தொற்று வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துக்கு அனுமதி அளிப்பதில்  சுணக்கம் நிலவுகிறது

வாசிப்புநேரம் -
ஜப்பான் - கொரோனா சிகிச்சைக்குரிய மருந்துக்கு அனுமதி அளிப்பதில் சுணக்கம்

படம்: REUTERS/Issei Kato

ஜப்பானில் கொரோனா கிருமித்தொற்று வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துக்கு அனுமதி அளிப்பதில் சுணக்கம் நிலவுகிறது.

கோரோனா நோய்த்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க Fujifilm Holdings நிறுவனத்தின் அவிகன் (Avigan) மருந்தை ரஷ்யாவும், இந்தியாவும் அங்கீகரித்துள்ளன.

இருப்பினும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அந்த மருந்தைப் பயன்படுத்துவதன் தொடர்பில் ஜூலை வரை முடிவெடுக்க முடியாது என்று கருதப்படுகிறது. 

மருத்துவச் சோதனைக்குப் போதிய கொரோனா நோயாளிகள் இல்லாததால் அந்த நிலை ஏற்பட்டுள்ளது. குன்மா பல்கலைக்கழக மருத்துவமனையில் அவிகன் மருத்துவச் சோதனைகளை நடத்தும் தெட்சுயா நாக்கமுரா அவ்வாறு கூறினார்.

உலகெங்கும் சுமார் 25 இடங்களில் அவிகன் மருந்து பரிசோதித்துப் பார்க்கப்படுகிறது. 

உள்நாட்டில் போதிய எண்ணிக்கையில் நோயாளிகள் இல்லையென்பதால், மருந்துக்கான அனுமதி பெறுவதற்கு, வெளிநாடுகளின் சோதனை முடிவுகளைச் சார்ந்திருக்க நேரலாம் என்று ஜப்பானிய சுகாதார அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்