Images
  • Japan Tests
    படம்: Reuters

தோக்கியோவில் கிருமிப்பரவல் தொடர்பான விழிப்புநிலை : ஆக உயரிய 4ஆம் நிலை

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில், கிருமிப்பரவல் தொடர்பான விழிப்புநிலை ஆக உயரிய 4ஆம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், கடந்த சுமார் 24 மணி நேரத்தில் புதிதாக ஈராயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் சுமார் 500 பேர் தோக்கியோவைச் சேர்ந்தவர்கள்.

நிலைமையைக் கட்டுப்படுத்த, ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga), வல்லுநர்களின் ஆலோசனையை நாடியுள்ளார்.

அரசாங்கம் மேற்கொண்டு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அவர்கள் பரிந்துரைப்பர்.

இதுவரை ஜப்பானில் கிருமித்தொற்று தொடர்பில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

வசந்த காலத்தில் நாடளாவிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டாலும், வர்த்தகங்களை மூடும்படியோ, பொதுமக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும்படியோ உத்தரவிடப்படவில்லை.

14 மில்லியன் பேர் வசிக்கும் தோக்கியோ நகரில் நாள்தோறும் சுமார் 6,000 பேருக்குக் கிருமித்தொற்றுச் சோதனை நடத்தப்படுகிறது.  

Top