Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான் கிருமிப்பரவல்- தேவைப்பட்டால் நெருக்கடிநிலை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும்: பிரதமர் சுகா

ஜப்பானில் நான்காவது முறையாகக் கிருமிப்பரவல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜப்பானில் நான்காவது முறையாகக் கிருமிப்பரவல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, தேவைப்பட்டால் நெருக்கடிநிலை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என, ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) கூறியுள்ளார்.

தலைநகர் தோக்கியோவில் (Tokyo)கிருமித்தொற்று மீண்டும் கடுமையாகி உள்ளது.

அண்மையில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களிடம், புதுவகைக் கொரோனா கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளதால், சுகாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதிய முடக்கநிலை, தோக்கியோவிலும் நீட்டிக்கப்படுமா என்று திரு. சுகாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அது குறித்த எல்லாச் சாத்தியங்களும் பரிசீலிக்கப்படுவதாகக் கூறினார்.

ஜப்பானில் Osaka, Hyogo, Miyagi ஆகிய மாநிலங்களில், பகுதிநேர முடக்கநிலை நடவடிக்கைகள், இன்று முதல் தொடங்குகின்றன.

அவை, ஒரு மாதத்துக்கு நடப்பில் இருக்கும்.
இன்று முதல், மூத்த குடிமக்களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்குகிறது.
அடுத்த வாரம், 65 வயதுக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்