Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான் பேரரசர் அரியணை ஏறியதைக் கொண்டாட அணிவகுப்பு

ஜப்பானியப் பேரரசர் நருஹித்தோவும், பேரரசி மசாக்கோவும்வும், கலந்துகொண்ட சிறப்பு வாகன அணிவகுப்பைக் காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

வாசிப்புநேரம் -
ஜப்பான் பேரரசர் அரியணை ஏறியதைக் கொண்டாட அணிவகுப்பு

(படம்: AFP/CHARLY TRIBALLEAU)

ஜப்பானியப் பேரரசர் நருஹித்தோவும், பேரரசி மசாக்கோவும்வும், கலந்துகொண்ட சிறப்பு வாகன அணிவகுப்பைக் காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

பேரரசர் நருஹித்தோ சென்ற மாதம் அரியணை ஏறியதைக் கொண்டாடும் விதத்தில் அந்த அணிவகுப்பு இடம்பெற்றது.

தோக்கியோவின் மத்திய பகுதியிலுள்ள அரண்மனையிலிருந்து சிங்கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் அணிவகுப்பு தொடங்கியது.

சுமார் அரை மணி நேரம் நீடித்த அணிவகுப்பு 4.5 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது.

26 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் அத்தகைய சிறப்பு வாகன ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு அவர்களது திருமணத்தின்போது அப்போதைய பட்டத்து இளவரசர், இளவரசி என்ற முறையில் அவர்கள் சிறப்பு வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

சென்ற மாதம் நடைபெற வேண்டிய அந்தச் சிறப்பு அணிவகுப்பு ஹகிபிஸ் சூறாவளியால் ஒத்திவைக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்