Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானைப் புரட்டிப்போட்ட வெள்ளம்: மனந்தளராமல் போராடும் மூத்தோர்

ஜப்பானைப் புரட்டிப்போட்ட வெள்ளம்: மனந்தளராமல் போராடும் மூத்தோர்

வாசிப்புநேரம் -
ஜப்பானைப் புரட்டிப்போட்ட வெள்ளம்: மனந்தளராமல் போராடும் மூத்தோர்

(படம்: Jack Board/CNA)

ஜப்பான் வெள்ளத்துக்கு இதுவரை குறைந்தது 200 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் பலரைக் காணவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் ஆக மோசமான வெள்ளம் இது.

மாபி எனும் நகரில் மட்டும் வெள்ளத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 50.வெள்ளத்தையடுத்து கடுமையான வெயில், வறட்சி. தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தண்ணீரை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்திருந்தாலும், அது போதவில்லை. நிவாரண முகாம்களில் தங்கியிருப்போர், போதுமான காற்றும், நீரும் இன்றித் தவிக்கின்றனர். நோய்ப்பரவல் அச்சம் வேறு.

(படம்: Jack Board/CNA)

பாதிக்கப்பட்டோரில் பலர் 60 வயதைத் தாண்டியவர்கள்.

வெள்ளநீர் சில இடங்களில் தற்போது வடிந்துவிட்டது. ஆனால் இடத்தைச் சுத்தம் செய்து மீண்டும் குடிபெயர அரசாங்க உதவிக்காகக் காத்திருப்பது சாத்தியமல்ல.

இதனால் அக்கம்பக்கத்தில் ஒருவொருக்கொருவர் உதவி செய்து நிலைமையைச் சொந்தமாகச் சரி செய்துகொள்ளத் தொடங்கியுள்ளனர் இந்த மூத்தோர்.

70 வயதுக்கு மேற்பட்டோர் கூட தாங்கள் தங்கியிருக்கும் முகாம்களிலிருந்து அன்றாடம் சென்று, தங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி பின் முகாமுக்குத் திரும்புகின்றனர்.

(படம்: Jack Board/CNA)

ஆனால் ஒவ்வொருமுறையும் வயதையும் வசதியையும் தாண்டி, தங்கள் விடாமுயற்சியை உலகுக்குக் காட்டி உதாரணமாய்த் திகழ்கின்றனர் ஜப்பானிய மக்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்