Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான் வெள்ளம்: மீட்புப் பணியில் மேலும் ஆயிரக்கணக்கான துருப்பினர்கள்

ஜப்பானில் கடும் வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில், கூடுதலான துருப்பினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஜப்பான் வெள்ளம்: மீட்புப் பணியில் மேலும் ஆயிரக்கணக்கான துருப்பினர்கள்

(படம்: Kyodo/via REUTERS

ஜப்பானில் கடும் வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில், கூடுதலான துருப்பினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கனத்த மழை தொடரும் நிலையில்,
ஏற்கனவே 80,000 பேர், தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தென் தீவான Kyushuவில் மட்டும் 54 பேர் மாண்டனர்.

மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்ட பிரதமர் ஷின்ஸோ அபே, ," கடுமையான பேரிடர் நிலையை" அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோருக்கு மறுசீரமைப்பில் சிறப்பு ஆதரவு நல்க அது கைகொடுக்கும்.

இதற்கிடையே, COVID-19 நோய்ப் பரவல் மீட்புப் பணிகளின் ஒருங்கிணைப்பை மேலும் கடுமையாக்கியிருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்