Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள தமது குடிமக்களுக்கு ஜப்பான் ஆலோசனை விடுத்துள்ளது

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள தமது குடிமக்களுக்கு ஜப்பான் ஆலோசனை விடுத்துள்ளது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள தமது குடிமக்களுக்கு ஜப்பான் ஆலோசனை விடுத்துள்ளது

( கோப்புப்படம்: AFP/Roslan Rahman)

ஜப்பானிய வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ்,
தாய்லந்து, மியன்மார், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள தனது குடிமக்கள் வழிபாட்டுத் தலங்களையும் கூட்டமான இடங்களையும் தவிர்க்குமாறு ஆலோசனை விடுத்துள்ளது.

மக்கள் பெருமளவு கூடும் அதுபோன்ற இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று வேவுத் தகவல் கிடைத்திருப்பதாக அது குறிப்பிட்டது.

கோலாலம்பூரில் உள்ள ஜப்பானியத் தூதரகம், தென்கிழக்காசியாவில் உத்தேச பயங்கரவாதத் தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதை உறுதி செய்தது.

ஆனால் அதுபோன்ற எந்த மிரட்டலையும் தான் கண்டறியவில்லை என்று மலேசிய காவல்துறை தெரிவித்தது.

நாட்டின் பாதுகாப்பும் பொது ஒழுங்கும் கட்டுக்குள் இருப்பதை அது மறுவுறுதிப்படுத்தியது.

தோக்கியோவில் உள்ள அதன் தூதரகம் ஜப்பானிய வெளியுறவு அமைச்சுடன் நெருக்கமாகப் பணியாற்றிக் கூடுதல் தகவல்களைப் பெறும்படி மலேசியா உத்தரவிட்டுள்ளது.

எச்சரிக்கை குறித்து ஜப்பானிடம் கூடுதல் தகவல் கோரியிருப்பதாக தாய்லந்து கூறியது.

ஆனால் தெளிவற்ற பதில் கிடைத்ததாக
அது குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்