Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார் யோஷிஹிடே சுகா

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திரு. யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
ஜப்பானின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார் யோஷிஹிடே சுகா

(படம்: Nicolas Datiche/Pool via REUTERS)

ஜப்பான்: நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திரு. யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மொத்தமுள்ள 462 வாக்குகளில் 314 வாக்குகளைப் பெற்று அவர் வென்றார்.

ஜப்பானில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம், ஜப்பானின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சித் தலைவராகத் திரு. சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) அறிவித்த திட்டங்களையும், பொருளியல் கொள்கைகளையும் தொடர அவர் உறுதியளித்தார்.

முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர், தங்கள் பொறுப்புகளைத் தொடர்வர் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும், திரு. சுகா பல சவால்களை எதிர்நோக்குகிறார்.

கிருமித்தொற்று நெருக்கடி, மூப்படையும் மக்கள் தொகை போன்ற பிரச்சினைகளையும் அவர் சமாளிக்க வேண்டும்.

குறைந்த அளவே அரசதந்திர அனுபவம் கொண்ட திரு. சுகா, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பதற்றத்தையும் கவனமாகக் கையாள வேண்டும்.

சீனாவுடனான உறவைத் தக்கவைத்துக்கொண்டு, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவருடனும் உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்