Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் அணு உலைகளை மூடத் திட்டம்

ஜப்பானில் சுற்றுப்புற அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ள திரு. Shinjiro Koizumi, அங்கு செயல்பட்டுவரும் அனைத்து அணு உலைகளையும் மூடப்போவதாகக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
ஜப்பானில் அணு உலைகளை மூடத் திட்டம்

(படம்: AFP/Toshifumi Kitamura)

ஜப்பானில் சுற்றுப்புற அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ள திரு. Shinjiro Koizumi, அங்கு செயல்பட்டுவரும் அனைத்து அணு உலைகளையும் மூடப்போவதாகக் கூறியுள்ளார்.

2011ஆம் ஆண்டு நடந்த Fukushima அணுச்சக்திப் பேரிடர் மீண்டும் நேர்வதைத் தவிர்ப்பது திரு. Shinjiroவின் நோக்கம்.

ஜப்பான் எவ்வாறு அணு உலைகளை அகற்றலாம் என்பது குறித்து ஆராயப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், ஆளுங்கட்சியின் எண்ணத்துக்கு திரு. Shinjiroவின் கருத்து முரணாக இருப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.

புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் அணு உலைகளின் செயல்பாடுகளைத் தொடர ஆளுங்கட்சி எண்ணம் கொண்டுள்ளது.

2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி காரணமாக Fukushima-வில் மூன்று அணு உலைகள் கசிந்தன.

அதில் வெளியான கதிர்வீச்சின் காரணமாக 160 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறினர்.

தற்போது ஜப்பானின் அனைத்து அணு உலைகளும் புதிய உரிமத்துக்கான செயல்முறைகளை மேற்கொண்டுவருகின்றன.

புதிய பாதுகாப்புத் தரநிலைகளின் அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்