Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை மீண்டும் அனுமதிப்பது குறித்துப் பரிசீலனை

ஜப்பான், அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து குறைவான எண்ணிக்கையில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை மீண்டும் அனுமதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை மீண்டும் அனுமதிப்பது குறித்துப் பரிசீலனை

(கோப்புப் படம்: AFP)

ஜப்பான், அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து குறைவான எண்ணிக்கையில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை மீண்டும் அனுமதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறது.

தோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் தயாராகிவரும் வேளையில் அரசாங்கம் அவ்வாறு பரிசீலிப்பதாக Asahi நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

கிருமிப் பரவல் கட்டுக்குள் இருக்கும் ஆசிய வட்டாரங்களில் இருந்து சிறிய குழுக்களில் சுற்றுப் பயணிகளை அனுமதிக்க அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.

சீனாவும், தைவானும் அவற்றில் அடங்கும்.

பயணிகள், கிருமி தொற்றவில்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழையும், விரிவான பயண-நிரலையும் முன்கூட்டியே சமர்ப்பிக்கவேண்டும்.

ஜப்பானில் இருக்கும்போது அவர்கள், தொடர்புத் தடத்தைக் கண்டறியும் செயலியைப் பயன்படுத்துவதும், அன்றாடம் தங்கள் உடல்நிலை குறித்துத் தகவல் அளிப்பதும் கட்டாயம்.

ஹோட்டல்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் அவர்கள் உள்ளூர் வாடிக்கையாளர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்