Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரசிகர்கள் இன்றி ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறக்கூடும்

வெளிநாட்டினர் விளையாட்டுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

வாசிப்புநேரம் -
ரசிகர்கள் இன்றி ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறக்கூடும்

(படம்:AFP/Philip FONG)


தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகள், ரசிகர்கள் இன்றி நடைபெறக்கூடும்.

விளையாட்டுகள் பாதுகாப்பாக நடத்தப்படும் என்று
தோக்கியோ 2020 ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் செய்க்கோ ஹஷிமோட்டோ (Seiko Hashimoto) AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஜப்பானிய மக்களையும் விளையாட்டு வீரர்களையும் ஏற்பாட்டாளர்கள் முழுமையாகப் பாதுகாத்தால் மட்டுமே ஒலிம்பிக் விளையாட்டுகள் வெற்றியடைந்ததாக அர்த்தம் என்று முன்னாள் ஒலிம்பிக் விளையாட்டாளரான ஹஷிமோட்டோ கூறினார்.

வெளிநாட்டினர் விளையாட்டுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜப்பானில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்திருப்பதால் உள்நாட்டு மக்கள் விளையாட்டுகளைப் பார்ப்பது குறித்த முடிவு ஜூன் மாதம் வரை தள்ளிப்போடப்பட்டிருந்தது.

விளையாட்டுகளுக்கு மருத்துவத் தொண்டூழிய அதிகாரிகள் தேவை என்று ஒலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டுக் குழு கேட்டிருந்ததன் தொடர்பில் குறைகூறல் எழுந்தது.

பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் மருத்துவப் பிரிவு மீதான நெருக்குதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: AFP/rw 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்