Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து திட்டம் - 165 மில்லியன் டாலர் நிதி வழங்க ஜப்பான் உறுதி

உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து திட்டம் - 165 மில்லியன் டாலர் நிதி வழங்க ஜப்பான் உறுதி

வாசிப்புநேரம் -
உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து திட்டம் - 165 மில்லியன் டாலர் நிதி வழங்க ஜப்பான் உறுதி

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து திட்டத்திற்கு 165 மில்லியன் டாலர் நிதி வழங்க ஜப்பான் உறுதிகூறியுள்ளது.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் ஒன்றரை டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியது. அதிலிருந்து உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதியளிக்கப்படும்.

உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் நியாயமாகவும் சிறந்த முறையிலும் விநியோகிக்கப்படுவதை COVAX திட்டம் உறுதிசெய்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் சொந்த தடுப்பு மருந்துகளைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

உலகளாவிய மருந்து நிறுவனங்களிடமிருந்து தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கும் ஜப்பான் தனிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

அடுத்த ஆண்டு முற்பாதிக்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பு மருந்து கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் COVAX திட்டத்தில் பங்கேற்க நாளை மறுநாள் (செப்டம்பர் 18) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்