Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Pfizer நிறுவனத்திடமிருந்து மேலும் தடுப்பூசிகளை பெறவுள்ள ஜப்பான்

Pfizer நிறுவனம், ஜப்பானுக்கு மேலும் அதிகமான COVID-19 தடுப்பூசிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

Pfizer நிறுவனம், ஜப்பானுக்கு மேலும் அதிகமான COVID-19 தடுப்பூசிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகாவின் கோரிக்கைக்கு நிறுவனம் இணங்கியுள்ளது.

ஆனால், எத்தனை தடுப்பூசிகள் வழங்கப்படும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், அங்கு, 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தேவையான அளவிலான தடுப்பூசிகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஜப்பான் பெறும் எனக் கூறப்பட்டது.

அந்நாட்டில் இதுவரை Pfizer, BioNTech தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் ஜப்பானில் மேலும் பலருக்குக் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் 4ஆம் கட்டக் கிருமிப்பரவலை எதிர்நோக்குவதாகச் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் அந்நாட்டில் தற்போது 0.9 விழுக்காட்டினருக்கு மட்டுமே முதல்முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒப்புநோக்க, தென்கொரியாவில் இரண்டரை விழுக்காட்டினரும், பிரிட்டனில் 48 விழுக்காட்டினரும் முதல்முறை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்