Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தடுப்பூசித் திட்டத்தில் ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றி ஜப்பான் பரிசீலனை

ஜப்பானிய அரசாங்கம், தடுப்பூசித் திட்டத்தில், ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறது.

வாசிப்புநேரம் -

ஜப்பானிய அரசாங்கம், தடுப்பூசித் திட்டத்தில், ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறது.

Kyodo செய்தி நிறுவனத்தின் தகவல்படி போட்டிகளில் கலந்துகொள்ளும் ஜப்பானிய வீரர்களுக்கு ஜூன் மாதத்திற்குள் 2 தடுப்பூசிகளும் போடப்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மருத்துவ ஊழியர்கள், மூத்தோர், நாட்பட்ட சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் முதலில் திட்டமிட்டிருந்ததைப் பலரும் சுட்டினர்.

தோக்கியோவில் வரும் ஜூலை மாதத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

ஜப்பானில் தடுப்பூசி போடும் பணி மற்ற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் சற்று மெதுவாகவே நடைபெறுகிறது.

அங்கு ஒரு வகைத் தடுப்பு மருந்துக்குத் தான் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1 மில்லியன் பேருக்கு மட்டுமே முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது மீண்டும் தள்ளிவைக்க வேண்டும் என்று ஜப்பானியர்கள் பலர் கூறுகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்