Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான் பெருமழையில் மாண்டோரின் எண்ணிக்கை 179க்கு உயர்வு

ஜப்பானில் பெய்த பெருமழையால் மாண்டோரின் எண்ணிக்கை 179க்கு உயர்ந்ததாக அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

ஜப்பானில் பெய்த பெருமழையால் மாண்டோரின் எண்ணிக்கை 179க்கு உயர்ந்ததாக அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்னும் சுமார் 67 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் கூறின.

30ஆண்டில் பெய்துள்ள ஆக அதிகமான மழையால் ஜப்பானின் மேற்குப் பகுதியில் சென்ற வாரம் வெள்ளப் பெருக்குடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

ஒக்கயாமா (Okayama) வட்டாரத்தில், பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

மீட்புப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடிவருகின்றனர்.

தேடல், மீட்புப் பணியில் சுமார் 75,000 பேர் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது.

பிரதமர் ஷின்ஸோ அபே, இன்று ஒக்கயாமா (Okayama) வட்டாரத்தைப் பார்வையிடவிருக்கிறார். நிவாரண உதவிக்காகச் சுமார் 18 பில்லியன் டாலரை அவர் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்