Images
  • japan rain (1)
    (படம்: AP)

ஜப்பான் :60 ஆண்டுகள் காணாத கனத்த மழை பெய்யக்கூடும்

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் கடுமையான மழை பெய்து வருகிறது.

அங்கு 60 ஆண்டுகள் காணாத அளவிற்குக் கனத்த மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

அந்நகரை நெருங்கிவரும் ஹகிபிஸ் (Hagibis) சூறாவளி, தாக்குவதற்கு மூன்று நாள் முன்னதாகவே அங்குள்ள வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடுமையான காற்று, மழையை எதிர்கொள்ளத் தயாராயிருக்குமாறு வானிலை ஆய்வகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஹகிபிஸ் ஆக அதிக அபாயமுள்ள சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்படலாம் என்று East Japan ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிவேக ரயில் சேவையும், வழக்கமான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம்.

இதற்கிடையே, ஜப்பானின் Nippon Airways நாளைக்கான தனது உள்நாட்டு விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.

Japan Airlines அதன் பெரும்பாலான விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.  

Top