Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

எல்லாக் கழிவுகளையும் மறுபயனீடு செய்ய முயலும் ஜப்பானிய நகரம்

பிளாஸ்டிக், காகிதம், இரும்புப் பொருள்கள் என அனைத்துப் பொருள்களின் கழிவுகளையும் மறுபயனீடு செய்ய முயல்கிறது ஜப்பானின் கமிகட்ஸு (Kamikatsu) நகரம்.

வாசிப்புநேரம் -

பிளாஸ்டிக், காகிதம், இரும்புப் பொருள்கள் என அனைத்துப் பொருள்களின் கழிவுகளையும் மறுபயனீடு செய்ய முயல்கிறது ஜப்பானின் கமிகட்ஸு (Kamikatsu) நகரம்.

எந்த ஒரு குப்பையையும் எரியாலைக்கு அனுப்பக்கூடாது என்பது அதன் இலக்கு.

கழிவுகளை 45 வகைகளாகப் பிரித்துச் சேகரிக்கும் அந்நகரம், 2020ஆம் ஆண்டுக்குள் நகரில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கழிவுகளையும் மறுபயனீடு செய்யத் திட்டமிடுகிறது.

கமிகட்ஸு நகரில் கிட்டத்தட்ட 1500 பேர் வாழ்கின்றனர். அவர்கள்,
குப்பைகளைத் தாங்களாகவே தொழிற்சாலைக்கு கொண்டு செல்கின்றனர்.

குப்பைகளைச் சேகரிக்க யாரும் வருவதில்லை என்பது சற்றுச் சிரமமாக இருந்தாலும், சுற்றுப்புறப் பாதுகாப்பை மனத்திற்கொண்டு அதைப் பொறுத்துக் கொள்கின்றனர்.

கமிகட்ஸு நகரம் தற்போது அதன் 80 விழுக்காட்டுக் குப்பைகளை மறுபயனீடு செய்து வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்