Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்காகப் பேரரசர் நருஹிட்டோ ஆழ்ந்த வருத்தம்

ஜப்பானின் புதிய பேரரசர் நருஹிட்டோ (Naruhito) ஜப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஜப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்காகப் பேரரசர் நருஹிட்டோ ஆழ்ந்த வருத்தம்

(படம்: AFP/Kazuhiro Nogi)

ஜப்பானின் புதிய பேரரசர் நருஹிட்டோ (Naruhito) ஜப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த 74ம் ஆண்டுநிறைவைக் குறிக்கும் நினைவுநாள் நிகழ்ச்சியில் அவர் தம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப்போரில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேரரசர் முதல்முறையாக் கலந்துகொண்டு பேசினார்.

போரில் உயிர் துறந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டதோடு உலக அமைதிக்காகவும் அவர் பிரார்த்தனை செய்தார்.

சென்ற மே மாதம் பேரரசராய் அரியணை ஏறிய நருஹிட்டோ போருக்குப் பிறகு பிறந்த முதல் ஜப்பானிய அரசர்.

அவர் பேரரசர் ஹிரோஹிட்டோவின் பேரனுமாவார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்