Images
  • japan (1)
    கோப்புப் படம்: Reuters

ஜப்பானில் மீண்டும் அதிகரிக்கும் கிருமிப்பரவல் - தோக்கியோவில் புதிய கட்டுப்பாடுகள்

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் கொரோனா நோய்ப்பரவல் தொடர்பான எச்சரிக்கை நிலை ஆக உச்சத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்தது அதற்கு காரணம்.

தோக்கியோவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று 500க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

ஜப்பானின் பல வட்டாரங்களில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை துரிதமாக உயர்ந்துவருகிறது.

நாள்தோறும் புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கை 2,000ஐத் தாண்டியுள்ளது.

இருப்பினும், ஜப்பான் அரசாங்கம் இதுவரை குறிப்பிடத்தக்க புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.

ஆனால், தோக்கியோவில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும் குடிமக்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

Top