Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குழந்தைப்பருவ கனவின் பலனாக உருவான ஜப்பானிய இயந்திரன்

ஜப்பானில் பிரபலமாகவுள்ள கேலிச்சித்திரங்கள் வீடியோ விளையாட்டுகள், ஆடைகள், திரைப்படங்கள் எனப் பலவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. 

வாசிப்புநேரம் -

ஜப்பானில் 44 வயது பொறியாளர் மசாக்கி நகுமோவிற்குக் குழந்தைப் பருவத்தில் தாம் கண்டு ரசித்த கேலிச்சித்திரக் கதாபாத்திரமான இயந்திர மனிதனை உருவாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவு இருந்தது.

அதன் விளைவு: 8.5 மீட்டர் உயரமுள்ள இயந்திர மனிதன்!

(படம்:REUTERS/Kim Kyung-Hoon)

7 டன்னுக்கும் மேல் எடையுள்ள அந்த இயந்திரனின் கைகள்,விரல்கள், உடலின் மேற்பகுதி, கால்கள் போன்றவற்றை அசைய வைக்கலாம் என்று திரு நகுமோ சொன்னார்.

ஒரு மணி நேரத்துக்கு 1 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்துக்கு நடக்கும் ஆற்றல் அதற்கு உண்டு.

வலது கையிலிருந்து பந்துகளை எறியும் அம்சத்தையும் திரு நகுமோ இயந்திரனில் சேர்த்துள்ளார். 

(படம்:REUTERS/Kim Kyung-Hoon)

இதனை நல்லதொரு வர்த்தக வாய்ப்பாகவும் தாம் பார்ப்பதாகக் கூறினார் திரு நகுமோ.

ஜப்பானில் பிரபலமாகவுள்ள கேலிச்சித்திரங்கள் வீடியோ விளையாட்டுகள், ஆடைகள், திரைப்படங்கள் எனப் பலவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. 

சக்ககிபாரா கீக்காய் எனும் நிறுவனத்தின்கீழ் நகுமோ தமது இயந்திரனைப் படைத்துள்ளார்.

அந்நிறுவனம் இயந்திரங்கள், கேளிக்கை இயந்திரங்கள் போன்றவற்றோடு வேளாண் துறைசார்ந்த கருவிகளையும் உற்பத்திசெய்கிறது.

நிறுவனத்தின் படைப்புகள் வாடகைக்கும் விடப்படுகின்றன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்