Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: இம்மாத இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைப்பு

ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடா (Fumio Kishida), இம்மாத இறுதியில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -

ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடா (Fumio Kishida), இம்மாத இறுதியில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

நாட்டில் மேம்பட்டு வரும் நோய்ப்பரவல் நிலவரம் தேர்தலில் தமக்குச் சாதகமாக அமையும் என்று திரு. கிஷிடா நம்புகிறார்.
அத்துடன் பதவியேற்ற போது அவருக்கு மக்களிடையே நல்ல ஆதரவு தென்பட்டது.

இருப்பினும் பதவியேற்ற ஒரு வாரத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அவருக்குக் கிடைத்த ஆதரவு, முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவிற்குக் (Yoshihide Suga) கிடைத்ததைக் காட்டிலும் குறைவு.

NHK செய்தி நிறுவனம் அந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது.

10 நாளுக்கு முன்னர் பதவியேற்ற திரு. கிஷிடா, தாம் முன்வைத்துள்ள கொள்கைகளுக்குத் தேர்தல் மூலம் பொதுமக்களின் ஆதரவைப் பெற விரும்புவதாகக் கூறியுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்